எத்தனை மாற்றங்கள்
இதயத்தில் இருந்தவள்
இடம் மாறினாள்...
கண்களில் இருந்தவள்
கண்ணீராய் மாறினாள்...
நினைவில் இருந்தவள்
கனவாய் மாறினாள்...
வாழ்க்கையில் இருந்தவள்
வானவில்லாய் மாறினாள்..
இன்பமாய் இருந்தவள்
துன்பமாய் மாறினாள்....
உயிரோடு இருந்தவனை
சிலையாய் மாறினாள்....