குருவிக் கூடு
சின்னச் சின்னக் குச்சியை
சிவந்த அழகு தன்னிலே
கொண்டு வந்து கட்டிய
குருவிக் கூட்டை பாருங்கள்
***************
வாழை குலை மீதிலே
வட்ட மான வடிவிலே
ஏழை குருவி கூடுதான்
என்ன அழகு பாருங்கள்
*******************
காற்று வீசி அடித்தால்
கனத்த வாழை சாயுமே
கனத்த வாழை சாய்ந்தால்
குருவி கூடு கலையுமே
*******************************
காய்கள் பளுக்கத் தொடங்கினால்
குலையை வெட்ட வேண்டுமே
குலையை வெட்டிப் போட்டால்
குருவி கூடு கலையுமே
*******************
குருவி கூடு கலைந்தால்
குஞ்சு கீழே விழுமே
குஞ்சு கீழே வீழ்ந்தால்
காயம் ரொம்ப ஆகுமே
****************
இறகு இல்லாக் குஞ்சுகள்
இறந்துப் போக நேருமே
பறந்து வரும் குருவிகள்
பார்த்து நெஞ்சம் வாடுமே
******************