திருந்தி வாழ்

அருகம் புல்லும் திரண்டால் மிடுக்கு ,
புல்லுக்கே இத்துணை வல்லமை
கொடுத்த இறைவன் மனிதர் நமக்கு
எத்துணை வல்லமையை தந்திருப்பார்
செயலில் சொல்லில் கடமையில்
தவறாது வழிநடந்து கொள்ளும்
பகுத்தறிவையும் தந்துள்ளார்.
உணராத மனிதன் மிருகம்தான்
ஆதியில் ஆதாம் ஏவாளின் அற்ப ஆசையினால்
அவகளுக்கு ஏற்ப்பட்ட சாபம்
அவர்களின் சந்ததியினராகிய நம்மையும்
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்
அதற்கு எடுத்துகாட்டாக கொலை கொள்ளை
கற்பழிப்பு கடத்தல் பேராசைகள்
மண் ஆசை பொன் ஆசை பெண் ஆசை
எல்லாம் மனிதனை கறை படிந்த
குற்றவாளிகளாக படு குழிகளுக்குள்
வீழ்த்திக் கொண்டே இருக்கிறது
இதை எல்லாம் பார்க்கிறான் கேட்கிறான் மனிதன்
திருந்த முடியாத திருத்த முடியாத
கல்நெஞ்சன் ஆகி விட்டான் மனிதன்
அறிவை பெருக்குகிறான் ஆராய்ச்சியில் தேறுகின்றான்
பெருமையும் புகழும் அவனை தேடி வருகின்றது
இருந்தும் மனிதன் மாறவில்லை
அவன் குணங்களும் மாறவில்லை
ஆசைதான் பேரழிவுக்கு காரணம்
அடக்க முடியா ஆசை கொள்வது தான்
மனிதனை அழிவின் விளிம்பிற்கே
அள்ளிக் கொண்டு செல்கிறது
மனிதனே சீக்கிரமாய் உணர்ந்து கொள்
உலகம் உன் அக்கிரமத்தால் அழிந்து கொண்டே போகிறது
மனிதனே தெரிந்து கொள், திருந்தி வாழ்.

எழுதியவர் : பாத்திமா மலர் (27-Jul-14, 2:01 pm)
Tanglish : thirunthi vaal
பார்வை : 247

மேலே