கலிகாலம்
பட்சணங்கள் பாயாசங்கள் பல இருந்தும்
பருகிட என்னவோ மனம் இல்லை...
பாசாங்கு படைத்த நண்பர்கள் முன்னே
பல்லிளிக்கத் தோன்றவில்லை...
கஞ்சியோ கூழோ கூரை வீட்டுக்குள்ளே
கனிவோடு பரிமாறும் பாங்கிநூடே
கழியும் பொழுதுகள் போரமாட்டா
கவரும் அன்பும் மாற மாட்டா...
அன்னையின் கையில் உண்ண வேண்டும்
நல்ல நட்பின் சிரிப்பில் வாழ வேண்டும்
தந்தையின் அறிவுரை நினைவில் வேண்டும்
தரணியில் நல்லவர்கள் அறிமுகம் வேண்டும்...