வியூகம் செய் அன்பே
தினவெடுத்த தோள்கள்
நான் ரசிப்பதற்கு மட்டுமல்ல...
மத யானையின் தும்பிக்கையாய்
நீண்ட கைகள்
என்னை சீண்ட மட்டுமல்ல...
புலியின் சீற்றமாய்
நீண்ட வேகம் நிறைந்த உன் மூச்சு
என் அருகாமைக்காய் மட்டுமல்ல...
தாவிப்பாயும் ஆத்திரம் நிறைந்த
சிங்கத்தின் பாய்ச்சலான உன் கால்கள்
எனக்கு மளிகை பொருட்கள்
வாங்குவதற்காக அல்ல.....
இத்தனைக்கும் மேலாக
நரியின் தந்திரம் நிறைந்த உன் மூளை
என் வீட்டுக் கணக்கை
மட்டும் சரி செய்வதற்கல்ல....
என் கணவனான போதும்
உன் வீரம், திறமை,பெருமை, வேகம்
அனைத்தும் நம் நாட்டிற்கே சமர்ப்பணம்....
விரைந்து சென்று நாட்டை காக்க
வியூகம் செய் அன்பே....