கற்றவை பற்றவை - கே-எஸ்-கலை

காகிதப் படிப்பு
கல்வியின் தொடக்கம் !
கடமையில் துடிப்பு
செல்வத்தின் தொடக்கம் !

செவ்வன அறிந்து
சீர்தொழில் பழகு !
உன்னுடன் இருப்பவன்
உணர்ந்திட ஒழுகு !
==
கதவினைத் திறந்தால்
வீட்டிற்கு வெளிச்சம் !
மனத்தினைத் திறந்தால்
விடியலின் வெளிச்சம் !

உண்மைகள் உரைத்து
உயர்வினை எடுத்து
ஊரான் பிள்ளைக்கும்
உய்வினை உடுத்து !
==
ஐம்பெரும் பாவம்
அடியோடு தவிர்த்து
ஐம்பொறி அடக்கி
ஐக்கியம் பேணு !

சாதிகள் வேண்டாம் !
சமயங்கள் எதற்கு ?
சகாவின் மூளையில்
இதனையும் கொளுத்து !
==
மண்ணைக் கொத்து
உழுவது உத்தமம் !
விண்ணைக் காத்து
உண்பது சாத்தியம் !

மெதுவாய் பழகு
விளைச்சல் பெருக்கு
தோழனை அழைத்து
அவனுக்கும் பழக்கு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (28-Jul-14, 2:02 am)
பார்வை : 141

மேலே