வாழ்வும் வசந்தமாய் மாறட்டும்
எண்ணங்கள் வண்ணமாகட்டும்
வண்ணங்கள் மலர்களாகட்டும்
மலர்களும் பூத்துக் குலுங்கட்டும் !
உள்ளங்கள் தோட்டமாகட்டும்
தோட்டத்தில் பூக்கள் மலரட்டும்
மலர்ந்ததால் மனமும் மகிழட்டும் !
நெஞ்சங்கள் நந்தவனமாகட்டும்
நந்தவனம் பூக்களால் நிறையட்டும்
நிறைந்ததால் இன்பம் பொங்கட்டும் !
இதயங்கள் பூங்காக்கள் ஆகட்டும்
பூங்காவில் நறுமணமே வீசட்டும்
நறுமணமும் நிலைத்தே இருக்கட்டும் !
மனங்கள் எழிலான மலர்களாட்டும்
எழிலே வாழ்வில் நிலைக்கட்டும்
வாழ்வும் வசந்தமாய் மாறட்டும் !
பழனி குமார்

