பசுமை பூமி பத்து

அணுவணுவாய் சேர்ந்தது தான்
பிரபஞ்சம் என்றார்கள்;
எனக்கு பிரபஞ்சம் வேண்டாம்,
அந்த முதல் அணுவை
தாருங்கள்….
துளித்துளியாய் சேர்ந்தது தான்
கடல் என்றார்கள்;
எனக்கு கடல் வேண்டாம்,
அந்த முதல் துளியை
தாருங்கள்….
குடிநீர் கடல்கள்,
நல்லவர்களாய் மனிதர்கள்,
பசுமை பூமி பத்து
சமைத்துக் காட்டுகிறேன்…