சேவையின் மகத்துவம்

நல்ல பெயரை நீ வாங்கி
நலம் பல சேர்த்து நாடு போற்ற வாழ்ந்து
நானிலம் மெச்சும் நல்லவனாக
நாளை எனும் ஒவ்வொரு நாளும் ,
நகர்த்திடு நல் விதமாய்,

சேவையே உன் சேவை என செய்திடு
நம் மக்களின் செப்பனிட்ட வாழ்க்கையினை
சீர்தூக்கி முன்வைத்து
செப்பமாய் வாழ்ந்திடவே

அளப்பரிய ஆற்றல் கொண்ட
அஸ்திவாரம் நீ என்றும்,
ஆரோக்கியம் நீ என்றும்
அறிந்திடுவோர் அறிவுடையோர்.

அன்புடனே பண்புடனே
ஆக்கமும் திறமையும்
உன் புகழ் போற்றிடவே
உவந்தளிப்பாய் உன் சேவைதனை

மனிதருள் மாணிக்கம் நீ என்று
மாநிலம் போற்றிடவே
உண்மையின் சேவையினை
ஊக்கமுடன் உணர்ந்து ஆற்றிடுவாய்

பிறருக்காய் வாழ்வதில் உள்ள சுகம்
நமக்காய் வாழும் போது கிடைப்பதில்லை
மனிதாய் பிறப்பதில் ஓர் அர்த்தம்
இதில்தான் தெளிவாகும்

எழுதியவர் : பாத்திமா மலர் (29-Jul-14, 8:55 pm)
பார்வை : 1476

மேலே