புலாலை புறக்கணிக்கலாமே

எப்போதும் போல இன்றி,
ஏறுமுகமாகவே இருந்தது இன்று !

ரகீம் பாய் கரிக்கடையில்
ரமலான் சிறப்பு வியாபாரம் !

அறுவைக்கு காத்திருந்த ஆடு,
அழுது விழுந்து புலம்பியது !

ஆசையாய் வளர்த்த ஆட்டுக்காரன்
அழிந்திடவும் சாபம் அளித்தது !

புனித திருநாள் அன்றாவது,
புறக்கணிக்கலாமே புலால் உணவை !

புறக்கணிக்கலாமா?

எழுதியவர் : கர்ணன் (29-Jul-14, 11:48 pm)
பார்வை : 96

மேலே