கன்னியின் கண்ணீரில் விதைக்கப்படுவதோ திருமணம் - அரவிந்த் C
மங்கையவள்
மலராய் மலர்ந்து
மணமுடிக்க காத்திருக்க..
பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...
நிறம் வேண்டும்
மனம் வேண்டாம்..
பொன் வேண்டும்
பெண்ணின் குணம் வேண்டாம்...
வீடு வேண்டும்
அதில் அன்பு வேண்டாம்..
என்று பொருளினை மையப்படுத்தி
வணிகமயமாக்கப்பட்ட உலகில்
வியபாரமயமாக்கப்ப்பட்ட திருமணங்கள்...
உறவுகள் கூடி நடக்கும்
திருமணங்கள் நகர்ந்து,
கோடிகள் கூடி நடக்கின்றது...
இருமனம் இணையும்
ஓர் சடங்கு...
அதை மாற்றி
பணம் என்னும் சகதியில் இணையும்
பிணங்களாய் திருமணம்....
பெண்ணென்றால்
ஏன் இத்தனை இளக்காரம்..?
ஒவ்வொரு ஆணை
ஈன்றவளும் பெண் தானே...
பண்ட பரிமற்றமாய்
பரிமானம் பெற்று வருகிறது
திருமணங்கள்..
தடைசெய்யப்போவது யார்...?
மாற்றம் வேண்டும்
பொன்னினை ஒதுக்கி
பெண்ணின் மனம் மட்டும் பார்த்து
மணக்கும் காலம்
வேண்டும் மீண்டும்...
வருமோ ஒரு
விடியல் பெண்ணிற்கு...