இறைவணக்கம்

புதுக்கோட்டையில் பிறந்து புதுமையில் சிறந்து புற்றுநோய்க்கு மருந்தாய் திகழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரை என் தாய்த்தமிழ் அன்னைக்கு நிகராய் வணங்குகிறேன்

" முத்து முத்தாய் பிறந்து வந்தாய்
முழு மழைத்துளியே ....

ஏட்டுக்கல்வி உனக்கெதுக்கு
என்று எடுத்தெறிந்த காலங்களில்
ஏட்டையும் ஏற்றுக்கொள்ள வைத்த
ஏணிப்படி நீ

காலனவன் கண்ணைக்கட்டி
உயிரைபிடித்துபோகையிலும்
மறித்துநின்று மருந்து தந்து
மீட்டுவந்த கடவுளின்
மாதிரி நீ ....


தூண்களில் கடவுள் இருப்பதாய் ஓர் உணர்வு
மருத்துவமனையில் நிற்கின்ற தூண்களிலும்
இருக்கின்ற இதயத்திலும்
நீயே இருக்கின்றாய்
மனமறிந்த இறைவனாக.....!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (31-Jul-14, 11:27 am)
Tanglish : iraivanakkam
பார்வை : 178

மேலே