வடிவம் தந்தவள் அம்மா

உன் கருவறையில்
சில மாதங்கள்!
உன் இதயத்திலே
என் வாழ் நாட்கள்!
எனக்கு உருவம் தந்தவள் நீ
என் உயிரில் இருப்பவள் நீ
நீ பாக்கும் போதெல்லாம்
என் சுவாசம் தவித்திடுமே
உன் சுவாசத்தை கருவறையில்
எனக்கு தந்தமையால்.
உன் அன்பில் எனை சுமந்தாய்
என் உயிரை அடை காத்தாய்
நான் பிறக்கும் தருணத்திலும்
என் வலியை நீ சுமந்தாய்
நான் பிறந்த மறுகணமே
உன் வலியை நீ மறந்தாய்.
என் பிள்ளை வளருவான் என்று
அனுதினமும் ஆசை கொண்டாய்
உன் பிள்ளை அழைத்திடும் வார்த்தையை
தினம் எண்ணி நீ மகிழ்ந்தாய்
அம்மா என்றழைதிடும் என்னை
அணைத்து முத்தங்கள் தந்திடுவாய் நீ
கலங்கிடும் மறுகணமே என் நெஞ்சம் கலங்கிடும்.
பள்ளியில் விட்டு வருவாய்
ஆனால் நினைவு முழுதும்
உன்னிடத்தில் இருக்கும் எனக்கு
அதே போல் உனக்கும்.
ஏங்கி வருவேன் என்னை
கண்டதும் ஓடிவருவாய்
கன்றுக்குட்டியை பிரிந்த பசுவை போல
என்னை அணைத்து முத்தம் இடுவாய்.
நீரில் தெரியும் வண்ணத்தை போல
நீ மணலாகவும் இருப்பாய்
நீ வனமாகவும் இருப்பாய்
நான் மட்டுமே உணருவேன் அம்மா
புயலை சுற்றி வேகமும்
புயலின் உள் அமைதியையும்
கண்டேன் அம்மா நீ என்னை வளர்க்கும் போது.
புயல் வீசும் போது வண்ணங்கள் மாறலாம்
ஆனால் மையம் ஒன்றே அதுபோல்
அம்மா உன்னிடம் அன்பை கண்டேன்.
என் கையில் வென்னீர் கொட்டியபோது அம்மா
நீ துடி துடித்தாய் அதை கண்ட நான் வழியை மறந்தேன்.
எனக்கு வரும் கஷ்டங்கள் எல்லாம்
பதறி ஓடியது நீ என் அருகில் இருந்ததால்
இந்த மண்ணை விட்டு நீ பிரிந்த போது
என்னை விட இந்த மண் தான் அதிக வருத்தம் அடைந்தது
உன்னை போல் ஒருவளை மீண்டும் நான் கானபோகிறேனா என்று.
இன்று உன்னை தொலைத்த நாள் அம்மா
உன்னை விடவும் ஒரு தீபம் இல்லை
உன்னை விடவும் ஒரு கோவில் இல்லை
உன்னை விடவும் ஒரு பேதம் இல்லை அம்மா.