கண்ணே உனைத் தேடுகிறேன் வா

எழுத்து சோலையில் பூத்த வாசமலரே
எங்கள் உள்ளத்தில் நிறைந்த பாசமலரே
கருத்தால் இதயம் கவர்ந்த நீலமலரே-நீ
கடுகி வர விழைகிறேன் கோலஎழிலே !!

அம்மா என்றழைத்து பாசச் சிறையிலிட்டாய்
அன்பில் ஒருகவிதை எனக்காய் படைத்திட்டாய் - உனைப்
பேசாத நாவில்லை புகழாத ஆளில்லை -நீ
யாரென்று அறிந்திட ஆர்வமின்னும் குறையவில்லை !!

சுற்றிச் சுற்றியே தளத்தினிலே வந்தாயே
சுற்றுலா சென்று வாரேனெனப் போனாயே
சுந்தரியே சரோநீ வந்துமெமை மறந்தாயே
சுணங்காமல் உன்வதனம் காட்டிடுவாய் என்கண்ணே !!

நாஞ்சில் நாட்டினளே நெஞ்சில் பதிந்தவளே
வாஞ்சையுடன் அம்மாநான் அழைக்கின்றேன் வாராயோ
போட்டியென்றும் பரிசென்றும் தளமே பூத்திருக்க
வாட்டியது போதுமே வாழ்த்தெனக்குக் கூறாயோ ....??

திங்கள் மூன்று கடந்து போச்சு
திரும்பி வந்து நாட்கள் ஆச்சு - உன்
பார்வைக்கு எம்கவிதை ஆவலுடன் காத்திருக்கு
பாவையே பைங்கிளியே பறந்தோடி வாராயோ .....??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Jul-14, 11:36 pm)
பார்வை : 295

சிறந்த கவிதைகள்

மேலே