அடியே அழகி

விண்ணை பிளந்து
உன்னை அடைந்து
உச்சம் தொட
நானும் எழ

வில்லை வளைத்து
சொல்லை இழைத்து
உன்னை வரைந்து
வெல்லும் எண்ணம் வர

தேனீ வண்டு
உன்னை தேடி வந்து
உன் கூந்தல் சூழ்ந்து
நங்கூரம் இட

பெண்ணே நீயோ
நாணும் நேரம்
மஞ்சள் விழுந்து
செவ்வானம் தர

அல்லி பூக்கள்
அள்ளி தந்து
உந்தன் முகமோ
நானும் நோக்க

உந்தன் இதழ்கள்
சுருக்கம் வழியே
என்னை கட்டிப்போடு
நான் உன் அடிமையாக

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (31-Jul-14, 3:22 pm)
Tanglish : adiye azhagi
பார்வை : 367

மேலே