என் கனாவில் யாரது

கனாக்களில் வரும் ஒரு
விம்பம் கேட்கிறேன்
யார் என்று ....
பதில் இல்லை எனினும்
மனதில் பதிந்தது
அவ விம்பம் .....
கனவில் மீண்டும் வரும்
போது ஜென்ம ஜென்ம
உறவு இருப்பதாய் ஒரு
உணர்வு ...
கனவில் வரும் விம்பத்தை
நேரில் காண தேடுகிறேன் .....
இப் பூமிதனில் அவ விம்பம்
உயிரோடு இருப்பதாய்
உணர்வோடு ........ !!