மண்ணில் தவழும் என் மடி மீன் - குமரி
மண்ணில் தவழும் என் மடி மீன்
மீன் விழியாள் சுரக்கும் சுவை நீர்..!
சுவை உணரா பிறப்பில் முதல் நீர்
முதல் நாவில் தொட்ட முலை நீர்..!
இப்பால் ஊட்டி பிள்ளை பாசம் காப்பீர்
வனப்பால் ஈட்டி உடல் எழில் பெறுவீர்..!
தாய்ப்பால் கொடுப்பீர் அது சேய்ப்பால் உணர்வீர்
இப்பால் தவிர்பீர் நீர் முதுமையில் தவிப்பீர்..!