அன்னையின் தாலாட்டு
மண்ணில் தவழும் என் மடி மீன் !
மாதம் பத்து நான்சுமந்த அழகுச் சுடரே !
அம்மா என்றெனையழைக்கும் அழகுக்குட்டிச் செல்லமே !
ஆராரோ நான்பாட நீஉறங்கு என்தங்கமே!
கன்னத்தில் மைஇட்டு அழகு பார்ப்பேன் !
கண்மணியே உன்மேல் ஊரார் கண்படுமுன் !
சுடர்விட்டெரியும் விண்மீன்களும் மங்கலாகக் கூடும்!
என்தங்கப் பதுமையே உன் சிரிப்பின் முன்னால்!
விலையில்லா அன்புமுத்தங்கள் தந்திடும் அன்பே !
உன் அணைப்பில்தான் உணர்கிறேன் நான் சொர்க்கத்தை !