மண்ணில் தவழும் என் மடி மீன் போட்டி கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண்ணிலிருந்து உன்னுள் நுழைந்த விண்மீன் நான்
ஈரைந்து மாதம் இருளிலும் உன்சுவாசத்தால் மிளிர்ந்தேன்
சிற்றின்ப ஆசையால் இம்மண்ணில் மழலையாய் பிறந்தேன்
உன்முகம் கண்டு பேரின்பத்தால் தினமும் திளைத்தேன்
நோயெனை தாக்காது தாயே நீதந்த விருந்து
உதிரத்தை உணவாக்கி நீதந்த தாய்பாலே அருமருந்து
உதிரத்தை இலகாக்கி எனை இரும்பாக்கிய தாயே
இந்நாளில் கண்ணீரால் உன் பாதம் கழுவுகிறேன் ...!!