என்னில் உன் ஆளுமை

பார்த்தேன்
பார்த்த உடன்
ரசித்தேன்
ரசித்து
முடிப்பதற்குள்
பறந்து விட்டாய்
படபடவென
பட்டாம்பூச்சியாய் !!

பட்டு போன என் இதயத்தை
உன் பட்டு நினைவினால்
தொட்டுவிட்டுபோனாய்
எனை அறியாமல் நானே
உறைந்து நின்றேன்...!!

சற்று நேரத்தில்
சட்டென்று திரும்பி பார்த்ததால்
சொர்க்கத்தில் இருப்பதாய்
உணர்ந்தேன்
உன் கடைக்கண்
என் மீது பட்டதாலோ !!

எனை கொன்று
தொடுத்தாய்
ஓராயிரம் பாடல்கள்
என்னுள் உன் விழி
கொடுத்த அதிகாரத்தால் !!

மென் காற்று என நினைத்தேன்
புயலாய் வீசி போனாய் !!

உன் ஸ்பரிசங்களால்
முதன் முதலாய்
நாணம் கொண்டேன்
பூவான நாள் முதலாய் !!

எழுதியவர் : பாரதி வினய் (1-Aug-14, 3:26 pm)
Tanglish : ennil un aalumai
பார்வை : 134

மேலே