உன்ேனாடுேபசியகாலம்

உன் பிம்பத்தைஎதிர்வரும் பெண்களுக்கு வைத்தாயா..

இல்லைஎன் கண்ணில்்
வைத்தாயா..,

பார்க்கும் முகங்களுக்குஎல்லாம்உன் வண்ணம் தீட்டி காட்டுகிறதுஎனது கண்கள்..

வயதின்வேதிய மாற்றத்தைகடந்தேன்..

சிறுபிள்ளைகளோடுகடக்கிறேன்உன்னை தேடும்என் காலங்களை.

சிறியபிரிவொன்றுதான்பெரிதாய்நினைவுபடுத்துகிறதுஉன்னை..

கவிதை மொழியும்குழந்தை பேச்சும்கற்றுத்தந்தது உனது நட்பு..,

புதிய அறிமுகம் ஏதும் இல்லை உனது நட்பில் உனது நட்புதான்அறிமுகம் செய்ததுஅனைத்தையும் புதிதாய்..,

தினமும்கடக்கும் சாலைதான்உன்னோடு
பேசிக்கொண்டு வந்ததைசுட்டிக்காட்டுகிறதுநீ இல்லாதபோது..,

நடந்தே கடக்கிறேன்உன்னோடுபேசிய காலங்களை..!!

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 7:20 pm)
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே