மழை அ ஆ இ

அன்பில் விளைவது அருள்மழை - நம்
ஆன்றோர் பொழிவது அறிவுமழை
ஏழையின் சிரிப்பில் இறைமழை - நம்
ஈகையில் பிறப்பது இன்பமழை
உறவுகள் பொலிவது பாசமழை -நம்
ஊருக்குள் வேண்டும் நேசமழை
என்றும் சிறந்தது இறக்கமழை - நமை
ஏங்கச் செய்வது வான்மழை
ஐயமுதம் பொலிவது ஆவின்மழை - நமை
ஒட்டும் உறவோ தேன்மழை
ஓட்டுகள் பதிவது வாகுமழை - நாட்டுக்கு
ஔடதம் தருவது நல்லாட்சிமழை

எழுதியவர் : ஜித்தன் கிஷோர் (2-Aug-14, 6:32 am)
பார்வை : 175

மேலே