மண்ணில் தவழும் என் மடி மீன்

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண் மீனையும் வெல்லும் கண்மீன்
நிலவின் மடி மீன் பிறை என்றால்
என் வடிவக் கோலமும் இவள் தானே
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
இவள் என்னை அணைத்த சுகம்
அவள் நாவின் நுனி பட்டவுடனே
இறைத் தன்மையை புரிந்து கொண்டேன்
என்னுள் நானாகி உணர்ந்து கொண்டேன்

எழுதியவர் : ரமணி (2-Aug-14, 2:54 pm)
சேர்த்தது : ரமணி
பார்வை : 104

மேலே