என் மனைவி
உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!
என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!
உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும் ....
அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே ....!!!!!
வாழ்க்கையில் பலக்கோடிகள் கிடைத்தாலும் ....
என்றுமே என் வாழ்வின் பெரிய சொத்து ....
அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை .....!!!!!
கனவில் கண்ட தேவதையாக .....
இவளைக்கண்டேன் என் நிஜ வாழ்வில் ....!!!!!
பட்டிக்காட்டான் என்று தெரிந்தும் ....
அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் ...
தவம் கொண்டேனோ .....!!!!!!!!!
உலகம் சிறிது இவள் அன்பிற்கு முன்னால் ....!!!!