இவள் கைவிடப்பட்டவள்

..."" இவள் கைவிடப்பட்டவள் ""...

நீயே சொந்தமென
நம்பியவள் வந்தாள்
நீயோ தேகம்தொட்ட
தூசியாய் அவளை
தட்டிவிட்டு ஏனோ
எட்டியே சென்றுவிட்டாய்
விட்டத்தை அவள்
வீரிட்டவளாய் விம்மலோடு
இலைகள் கொய்யப்"பட்ட"
பட்ட மரமானால் சிலரது
இலக்(கு)கண பிழைகளால்,,
சிரிப்பை மறந்து
சிதைந்திட்ட சித்திரமாய்
படித்து முடிக்காத
செல்லரித்த காகிதமாய்
பொலிவிழந்த அழகிய
சித்தன்னவாசல் ஓவியமாய்
பின்னலிடப்பட்ட
கூந்தலோடு அவள் வாழ்வும்
ஏனோ பின்னிக்கொண்டது
கட்டுப்பாட்டின் கயிற்றில்
கட்டப்பட்டு கண்ணீரை
சொந்தமாக்கி முடக்கப்பட்டு
வேடிக்கை பொருளாய்
வேதனைகளோடு
கொந்தளிக்கும்
ஆழிப்பேரலையை
தன்னுள்ளடக்கிய கடலாய்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

குறிப்பு : -
வறட்டு பிடிவாதத்தாலும் அகங்காரத்தாலும்
சொந்தங்களை பிரித்து தனக்கு மட்டுமே எல்லாம்
என்று நினைக்கும் சில பெண்களை தவிர உண்மை
நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இந்த
கவிதை சமர்ப்பணம் .........

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (3-Aug-14, 1:09 pm)
பார்வை : 191

மேலே