நண்பர்கள் தினத்திற்காக ஒரு பாடல் குமார்ஸ்
எழுதிய வுடன் பதிந்து விட்டேன் ..பிழை இருந்தால் சொல்லிவிடவும்
******
தோள் கொடுக்க தோழன் உண்டு ..
தோற்கடிக்க யாரு இங்கு ..
வானம் எங்கும் வட்டம் போட்டு ..
வாழ வேணும் பங்கு ...
காலையில கிரிக்கெட் ஆட்டம் ..
மாலையில தேநீர் கூட்டம் ...
வானம் பூமி வாழ்த்து சொல்லி
எங்க நட்ப பாராட்டும் ...
தேனீ போல சுறுசுறுப்பாக்கும் ..
தேர்வு இன்னா தூக்கம் மாப்பு ..
ரிசல்ட் வந்த first கிளாஸ் ல
பாசு நாங்க ப்பு ..
நாம ஒரே சொந்தம் மில்ல
ரெத்தம் ஓடும் பந்தம் மில்ல ..
நித்தம் நம்ம சுத்தும்
இந்த பூமி நம்மதில்ல ..
என் மூச்சுக்குள்ளே உன் சுவாசம் தான் ..
உன் நெஞ்சுகுள்ளே என் நேசம் தான் ..
சுற்றும் காற்றும் நம்ம பத்தி
சொல்லி போகும் சொக்க தங்க தான் ..
தோள் கொடுக்க ..மச்சி..மச்சி...
தோள் கொடுக்க ..தோழன் உண்டு ..
தோற்கடிக்க யாரு இங்கு ..
வானம் எங்கும் வட்டம் போட்டு ..
வாழ வேணும் பங்கு ...
#குமார்ஸ் ...