வேட்க்கித் தலை குனியுங்கள்
வெட்க்கித் தலை குனியுங்கள்
வெட்கமறியா மலர்களே !
எத்துனை அழகு தெரியுமா
வெட்கத்தில் என் சகோதரி !
வேர்கள் அறியாத
உன் வாசம் போல
நானும் அறியாமல் இருந்திருக்கிறேன்
அவள் நானும் அழகை !
ஆண் பிள்ளை போல்தானே
வளர்ந்தால் !
அவளையும் ஆட்க்கொண்டுவிட்டது
அந்த ஆடவனின் காதல் !
ஆயிரம் முறை கேட்டிருப்பாள்
என்னிடம் உன்னை !
அதனால்தானே அழகென்ற
ஆணவம் உனக்கு !
அப்படி ஒன்றும் அழகில்லை
நீ !
அவள் அத்திப்பூ சிரிப்பிற்கு
முன்னாள் !
பிழைத்துப்போ கடைசியாய் உனக்கொரு
வாய்ப்பளிக்கிறேன் !
அவள் கழுத்திற்கு மாலையாக !
அவளிடம் கற்றுக்கொள் வெட்கப்பட
பிறகு பார்க்கலாம்
அவள் அழகில் பாதிக்கு நிகரா
நீ என்று !
என்ன பார்க்கிறாய் !
நாட்கள் அதிகமில்லை !
தயாராய் இரு
என் அன்னைக்கு நிகரான
அக்காவின் திருமணத்திற்கு !