உண்மைதான் பேசத்தெரியவில்லை எனக்கு

உண்மைதான்
பேசத்தெரியவில்லை எனக்கு !

ஊமையாய்
பிறந்திருக்கலாம் உன்னிடம் பேசாத
வார்த்தைகளை நான் சுமப்பதற்கு பதில் !

உண்மைதான்
வென்றெடுக்க முடியவில்லை உன் இதயத்தை

வேடிக்கை
பார்த்திருக்கலாம் வேதனைகளை மட்டும்
பரிசாய் பெற்றதற்கு பதில் !

உண்மைதான்
உண்மையாய் நேசிக்கவில்லை நான் உன்னை !

உன் நினைவுகளோடு மட்டுமே வாழும்
என்னால் எப்படி நேசித்திருக்கமுடியும் உன்னை !

நேற்று வந்தவனின்
நேசம் பெரிதாகிப் போனது உனக்கு !

நேரமில்லாமல்
இருக்கிறேன் உன்னை மறக்க நான் !

நேரம் இருந்தால்
வந்துவிட்டு போ என்மீது மலர்தூவ ............

எழுதியவர் : முகில் (5-Aug-14, 11:21 am)
பார்வை : 521

மேலே