கொஞ்சம் ரசிக்க வாங்க

பசுமைபடர் பர்வதத்தில்
பாலருவி பொங்கிவிழும் ....!!

அலங்கார விருட்சவளைவு
அழகாக வரவேற்கும் ....!!

வெயிலுக்குத் திரைபோட்டு
வெண்மேகம் குடைவிரிக்கும் .....!!

மலையருவி விழும்சத்தம்
மதுரமாய் மனம்மயக்கும் ....!!

தடாகம் தவழும்தென்றல்
தடவமேனி சிலிர்த்துவிடும் .....!!

கரையமர்ந்து காட்சிகாண
கவிதைகள் ஊற்றெடுக்கும் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Aug-14, 12:41 pm)
பார்வை : 3565

மேலே