அன்புள்ள தோழிக்கு ஒரு கவிதை

பலருக்கு பல கோணங்களில்
கவிதை எழுதிய கவிஞசன் நான்

அன்பு தோழியே
உன்னை நினைத்து - ஒரு
கவிதை எழுத
என் பேனாவை ஏந்தினால்
மட்டும் தான் என்னவோ - காகிதங்கள்
கானல் நீரை மட்டும் கண்டு களித்த
பாலைவனமாய் போனது

தமிழில் கூட
வார்த்தைகள் இல்லை
நம் நட்புக்கு கவிதை எழுதி
அழகு சேர்க்க

இயற்கையிடம் கூட
உவமைகள் இல்லை
நம் நட்பின் வரிகளை
வர்ணிக்க

என்னை விட என் பேனாவுக்கு
ஆசை அதிகமாகிப்போனது
உனக்காக ஒரு கவிதை
எழுத வேண்டும் என்று

பேனாவை விட காகிதமிடம்
ஆர்வம் அதிகம் தூன்றியது
எப்போது அந்த கவிதை
மழையில் நனைவேன் என்று

ஒரு நாள் என் பேனாவின்
கனவுகள் நனவாகும்
காகிதங்களில்
கவிதை வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடும்

ஆனால் எப்படி எழுதினேன்
என்பதற்கு என் நட்பு மட்டுமே சாட்சி

எழுதி முடித்த என் கவிதையை
என் கல்லறையில் எழுதி
வைக்கிறேன்
நீ வந்து எனக்கு மாலையிட்டு
கவிதையை வாசித்து செல்
நீ போன பின்பு
உயிர் பெற்று எழுவேன்
மீண்டும்
உனக்கான ஒரு தோழனாக

மரணமும் மரித்து போகும்
நம் நட்பை கொலை செய்ய நினைத்தால்.
.................................................................................................................................................

இக் கவிதை என் உயிர் தோழிக்கு சமர்ப்பணம்


அன்புடன்
ஏனோக்

எழுதியவர் : ஏனோக் நெகும் (5-Aug-14, 2:13 pm)
பார்வை : 1832

மேலே