உதிரட்டும் உரமாக நட்பே

நட்பென்னும் மழையில்
நனைந்திட்டேன் நாளெல்லாம்

உன் அருகில் இருந்து
உன்னோடு பேசி
உன்னோடு சாப்பிட்டு
உனக்காக உறைந்துட்டேன்
அன்பையும் கற்றுக்கொண்டேன்

உலகத்தில் எத்தனையோ
உறவுகளை - நான் இழந்திருக்கேன்
உன்னையும் சேர்த்து
ஆனால் உன் முகம் மட்டும்
என்றும் மறவாது.

நண்பர்கள் இருக்கும் வரை
நட்பு நிலைத்திருக்கும் என்பார்கள்
என் உயிர் உள்ளவரை உன் முகமும்
என்னுள்ளே இருக்கும் இறுதிவரை

கண்கள் காயப்படும் என்று நினைத்து
உன் சோகத்தை கூட என்னுடன் நீ
பகிர்ந்து கொண்டதில்லை....
சிரித்தால் தலைவலி வந்துவிடும் என்று
சந்தோசத்தை கூட என்னுடன் பகிர்ந்தது இல்லை

ஒரு பொம்மைபோல் என்னை
நீ அரவணைத்து கொண்டாய்

எதை எதையோ கற்றுகொடுத்த
இந்த கல்லூரிச்சாலை
நல்ல நண்பர்களை மட்டும்
பிரித்து விட்டது.

மனது இன்றும் நினைத்து
கொண்டுதான் இருக்கிறது
அந்த பசுமை மாற
நட்பின் கிளைகளாக
ஏதோ ஓர் மரத்தின் இலையாக
குலுங்கிகொன்டுதான் இருக்கிறது.

உதிரும் இலைகள்
ஒவ்வொன்றும் ஒளிர்விட்டு
கொண்டுதான் இருக்கிறது
மரத்தின் அடியில் உரமாக

எழுதியவர் : (5-Aug-14, 9:12 pm)
பார்வை : 403

மேலே