கவிதையிடம் மன்றாடலாமா -சந்தோஷ்

கவிதையிடம் மன்றாடலாமா?
பிரம்மன் எழுதிய
ஒரு கவிதை
பருவமடைந்து
வாசகன் என்னை
இம்சிக்கிறது.
கவிதையின் முதல் எது
கவிதையின் முடிவு எது
எங்கு ஆரம்பித்து
எதை படிப்பது?
புதுமொழி கவியோ அவள்!
லென்ஸ் விழியில் -என்
பல்ஸ் ஏற்றுகிறாள்.
செந்தீ இதழில் எனை
தீண்டி எரிக்கிறாள்.
பூப்படைந்த சாட்சிகளை
காட்சிப்படுத்தாமலே எனை
மிரட்சிப்படவைக்கிறாள்.
அவள் உடல்மொழியால்
அன்னை தமிழ்மொழி அழகாய்
என்னை ரசிக்கவைக்கிறாள்.
பிரம்மன் எழுதிய கவிதைக்கு
காப்புரிமை கோரி
காமதேவனிடம் முறையிடலாமா?
அல்லது
கவிதையிடமே மன்றாடலாமா?
பட்டிமன்றமாய்
குழப்பமனநிலையில்
காதல் முற்றிய
கோமாளியாய் நான்..!
-இரா.சந்தோஷ் குமார்.
------------------------------------------------------------------------------------------------------------------
( உணர்ச்சி கொந்தளித்து சமூகபடைப்பும் புரட்சிபடைப்பும் எழுதி, அது யாரும் கேட்பாரற்று , யாரும் சீண்டாம நாசமா போவதை விட இப்படி காதல் கவிதை எழுதிட்டு நாலு பேருகிட்ட பாராட்டு வாங்கிட்டு சந்தோஷமா இருக்கலாம்ன்னு தோணுது.)