+உனக்கென்ன கோபம் கோபம் நான் ரொம்ப பாவம் பாவம்+

உனக் கென்ன கோபம் கோபம்
நான் ரொம்ப பாவம் பாவம்
மனப் பூவை வாட்டுதல் முறையோ
தினம் நெஞ்சில் ஈட்டிகள் சரியோ

துயர் துடைக்க வழி சமைப்பாயோ
இடர் உடைக்க வழி அமைப்பாயோ
முற்றும் இதற்கு என்று வைப்பாயோ
முடிந்த வரைக்கும் கொன்று நிற்பாயோ

வசந்த காலம் திரும்பிடல் என்று
வாசப் பூக்கள் மலர்ந்திடல் நன்று
இசைந்து போதல் இனி நடந்திடுமோ
இதய மோதல் இனி முடிந்திடுமோ

வானம் எனக்காய் அழுதிடக் கூடும்
குடையைப் பிடித்து அவ மதிக்காதே
காற்றும் பேச வாசல் வந்திடும்
கதவைச் சாத்தி சுயம் இழக்காதே

இனிமை எனக்கு தந்திடு நீயும்
தனிமை என்னை எரித்திட விளையும்
முதுமை துணையாய் அழைத்திடும் முன்னே
பதுமை நீயும் செவிசாய் பெண்ணே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Aug-14, 7:09 am)
பார்வை : 247

மேலே