வாழ்க்கை ஒரு பயணம்

வானம் எழுதும்
கவிதை நிலவு
மௌனம் எழுதும்
கவிதை மாலை
கனவு எழுதும்
கவிதை காதல்
காலம் எழுதும்
கவிதை வாழ்க்கை
வாழ்க்கை எழுதும்
கவிதை
கண்ணீரா மகிழ்ச்சியா ?
சுமையா சுகமா ?
இந்த அனுபவங்களின்
தொடர் பயணமா ?
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (7-Aug-14, 9:00 am)
பார்வை : 327

மேலே