அவள் ஒரு மயில் நான் ஒருமையில்

நீ தோகை கொண்ட
பெண் மயில்
என்னை விழ்த்திவிட்டாய்
பெண்மையில்

ஏதோ மாற்றமடி
என் ஆண்மையில்
அதை உணர்ந்த நொடி முதல்
நான் மாட்டிக்கொண்டேன் தனிமையில்

ஒருதலை காதல் கொடுமையில்
குறைகிறேன் எந்தன் ஒரு மெய்யில்
கவர்கிறாய் உந்தன் விழி மைய்யில்
தருகிறேன் பாதி என் உடைமையில்

வீதியில் நீ வருகையில்
மழைத்துளி உன்னில் விழுகையில்
சிதறுதே வண்ணம் நீ சிரிக்கையில்
அதை பிடிக்கவா என் இரு கையில்

நானோ இங்கு ஒருமையில்
மணி நேரம் எல்லாம் வெறுமையில்
காதல் பிச்சை இடு
என் வாலிப வறுமையில்
நான் செல்கிறேன் உலகம் வியக்கும்
அழகியின் உள்ளம் கவர்ந்த பெருமையில்

எழுதியவர் : கவியரசன் (7-Aug-14, 3:24 pm)
பார்வை : 396

சிறந்த கவிதைகள்

மேலே