யானைக்கு அரிப்பெடுத்தால்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிலனெஸ்பெர்க் தேசிய வனப்பூங்காவில்
உள்ள ஆண் யானைக்கு வயிற்றுப் பகுதியிலும்,முதுகிலும் அரிப்பெடுத்தது.
வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த வோக்ஸ்வேகன் காரைத்
தேர்ந்தெடுத்தது. அருகில் சென்றது. வயிற்றுப் பகுதியைச் சொரிந்து கொண்டது.
மறுபக்கம் வந்து முதுகையும் சொரிந்து கொண்டது. காரை விட்டு
காட்டுக்குள் சென்றது. ஆண்மைக்குக் காரணமான 'டெஸ்டோஸ்டீரான்'
ஹார்மோன் அதிகச் சுரப்பினால் 'மதம்' பிடித்து அப்படி நடந்து கொண்டதாகச்
சொல்லப்படுகிறது.
காரின் உள்ளேயிருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றித் தப்பினர்.