ஒற்றுமை என்றும் பலமாம்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு அருகிலுள்ள ஸ்டிர்லிங் ரயில் நிலையத்தில்
நின்ற ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் நடைபாதைக்கும் ரயிலுக்கும்
இடையிலிருந்த இடைவெளியில் தவறி காலை நுழைத்து விழுந்து விட்டார்.
ரயில் ஊழியர் ஓட்டுனரை எச்சரித்து ரயிலைக் கிளப்பாமல் பயணியைக்
காப்பாற்றினார். ரயிலில் இருந்த அனைவரும் இறங்கி ஒன்று சேர்ந்து
கைகொடுத்து ரயிலையே ஒரு பக்கமாகச் சற்று சாய்த்து 10 நிமிடத்தில்
பயணியைக் காப்பாற்றினர். கூட்டு முயற்சி பயணியின் காலையும்,
உயிரையும் காப்பாற்றியது.
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெட்டிகளுக்கு எதிரே
'இடைவெளி கவனம்' (Mind the gap)) என்ற அறிவிப்பு இருக்கும்.
இருந்தும் அவசரத்திலும், கவனக் குறைவினாலும் விழ நேர்வதுண்டு.