என் கல்லறையில் மட்டும் ஒரு முத்தமிடு

கொல்லாமல் சென்றுவிட்டாய்
சொல்லி விட்டுசென்ற அந்த
வார்த்தையால் என் உயிர்பூவும் கருகுதடி

என் மேனியெங்கும் எரியுதடி
நீ பார்க்கும் போது பூக்கும் பூக்களில்
என் ஆண்மைப் பூவும் ஒன்று!!!

நீ சொன்ன வார்த்தையால்
இவ்வுலகத்தை விட்டே
நான் எரியப்பட்டேன்

என்னை எரித்து விட்டாலும்
நான் சாம்பலாகி போனாலும்
உன் பெயரை மட்டும் தானடி
சொல்லியிருந்தேன்

என் இதய கல்வெட்டில் உன்னை
செதுக்கிணேனே உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது அந்த வார்த்தையை சொல்ல!

சொன்ன பின் மறைந்து விடுவேன்
என சொன்னாயா என் உலகத்தையே
உன்னில் தானடி அடகு வைத்தேன்

காமத்தை வைத்து காதல் செய்ய
எனக்கு தெரியவில்லை காதலை காட்டி
காமம் புரிய எனக்கு மணமும் இல்லை

அள்ளி முடித்த மேக கூந்தலில் அல்லியாய்
நான் ஜொலித்திருந்தேன் பறித்து அதனை
காலில் போட்டு நசுக்கினாலும் பொறுத்திருப்பேன்

"பிடிக்கவில்லை" என்ற நஞ்சு வார்த்தையை
முகத்துக்குநேரே கூறிசென்றாயே

"பிடுங்கிவிட்டேன் உனக்கு பிடிக்காத
என் உயிரை" மீண்டும் ஒருமுறை நீ
திரும்பிவந்தால்.................
என் கல்லறையில் மட்டும் ஒரு முத்தமிடு

......என் ஆன்மா சாந்தியடையட்டும்!!!

ப்ரியமுடன்...
லெட்சுமிநாராயணன்

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (8-Aug-14, 12:32 am)
பார்வை : 148

மேலே