தமிழ்தாயே

தமிழ்த்தாயே ...
உன்னை வேரோடு சாய்க்கும்
எங்களைக் கண்டும்
ஏனிந்த மௌனம்?

முதன்முறையாக வேறொருத்தி
எங்கள் நாவில் நடமிட்டபொழுதே
நாவைத் துண்டித்திருக்கவேண்டும்.

பிறரை வாழ வைக்கும்
உனைக்கொன்று உன் மேலேயே
பரதநாட்டியமா?

அன்று உன்னில் கலவைக்
கம்மிஎன்று மௌனித்திருந்தாய் ,

இன்று கலவையே நீயானபோதும் ...
எங்கள் நம்பிக்கை வயலில்
நீ தேவையற்ற நாற்றான போதும்
மௌநித்திருக்கிறாயே ;

உன் படைப்புக்களை
காலமும் வெல்லாதென்ற
இறுமாப்பா?
இல்லை
மீண்டுவந்த கோவலன்போல்
நாங்களும் உன் காலடி வீழ்வோமென்ற
தன்னம்பிக்கையா?

எழுதியவர் : அபர்ணாசெங்கு (8-Aug-14, 7:41 pm)
சேர்த்தது : அபர்ணா
பார்வை : 81

மேலே