தாய்
பத்து மாதம் பத்திரமாய்
கருவறையில் சுமந்தாய்
இன்னும் எத்தனை மாதம்
இதயத்தில் சுமப்பாயோ
என் வயிறு நிறைய
உன் வயிறு காய வைத்தாய்
நான் அழு முன்னே
நீ அழுதாய்
நான் வாழவே
நீ வாழ்ந்தாய்
என் எண்ணங்களை
எனக்கு முன்
நீ அறிந்தாய்
ஓ.. நீ தான் தாய் தாய் தாய்..