மழை ஒரு உவமை
மழலைக்கு
கைநனைத்து களிப்பூட்டும்
விளையாட்டுப் பேச்சாக...
கல்லாதவனுக்கு
பள்ளிக்குள் ஒதுங்க
ஒரு வாய்ப்பளித்த தேவதையாக...
செல்வந்தனுக்கு
பரந்த வானம் வீசியெறியும்
கொத்து வெள்ளிக் காசாக...
பொறியாலனுக்கு
பல மெகாவாட்ஸ்களுக்கு நடுவே
தோன்றும் அறிவியல் ஊற்றாக...
கவிஞனுக்கு
பொறாமை கொள்ளவைக்கும்
அரும் பெரும் கவிதை தொகுப்பாக...
காதலனுக்கு
தலைவியின் நினைப்பை
மீட்டுத் தரும் இன்பத்தின் சின்னமாக...
கலைஞனுக்கு
இயல் இசை கோர்த்து
நாடகத்தை காடும் மாபெரும் கலைஞனாக...
விவசாயிக்கு
மேகம் என்னும் உழவன்
விதைக்கத் தூவும் விருட்சம் தரும் நல் விதைகளாக...
உழைப்பாளிக்கு
பகல் முழுக்க சூரிய வெப்பத்தை
தாங்கும் முகில்களின் வியர்வைத் துளிகளாக...
ஒவ்வொரு மானுடனுக்கும்
ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கிறது
இந்த multiple personality பொருந்தப்பெற்ற அழகிய
வான் மழை !!!