எப்படிப் பாடினாரோ - ராகம் கர்நாடக தேவகாந்தாரி

சுத்தானந்த பாரதி இயற்றி, கர்நாடக தேவகாந்தாரி ராகத்தில் பாடிய
அருமையான தமிழ்ப் பாடல்.

humanityashore என்ற வலைத்தளத்தில் D.K.பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம்,
சௌம்யா, உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ பாடுவதைக் கேட்கலாம்.

கத்ரி கோபால்நாத் சாக்ஸபோனிலும், குன்னக்குடி வைத்யநாதன் வயலினிலும்
வாசிப்பதைக் கேட்கலாம்.

எப்படிப் பாடினாரோ எப்படிப் பாடினாரோ அடியார்
எப்படிப் பாடினரோ அடியார் எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ~~~~~

அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே

எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ~~~~~

குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்

கருணைக் கடல் பெருகி;
கருணைக்கடல் பெருகி; காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால்; இனிதுனை அனுதினம்

எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ~~~~~

கருணைக்கடல் பெருகி; காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால்; இனிதுனை அனுதினம்
எப்படிப் பாடினாரோ~~~~~

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-14, 12:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 252

மேலே