என் காதல் கதை பகுதி 27
அணு அணுவாய் கணு கணுவாய்
ரசிக்கின்றேன் உன்னை நான்
ரசித்ததை வெளிபடுதவே
எழுதுகிறேன் கவிதை நான் ....
என் கவிதை எல்லாமே
உண்மையின் பிம்பங்கள்
படித்தால் பிடித்துபோகும்
காதலின் சம்பவங்கள்
காதலில் யோசிக்கலாம்
காதலித்து யோசிக்கலாம்
காதலை யோசிக்கலாம்
காதலிக்க யோசிக்கலாமா
என் சோதனையும் அதுதான்
வெளிப்படையாய் சொல்லிட
முடியாத போவதால்
புலம்புகிறேன் கவிதையில் ...
புரியட்டும் என் வேதனை
நான் கண்ட சோதனை
காதலால் நான் கண்ட
எனக்கு தெரிந்த போதனை