கர்மவீரர் காமராசர்

விருதுநகரில் பிறந்த பச்சைத்தமிழராம்
வகுத்தபாதையில் வழுவாமல் வாழ்ந்தவராம்
எளிமையின் திருவுருவாய்த் திகழ்ந்தவராம்
ஏழைப்பங்காளனாய் சிறந்து நின்றவராம் !

உருவத்திலே கருப்பான உயர்ந்தமனிதராம்
உள்ளமது வெள்ளையான தென்னாட்டுகாந்தியாம்
குலக்கல்வி திட்டத்தை ஒதுக்கிவைத்தவராம்
குடிசைமிகு கிராமத்துக்கும் ஒளிதந்தவராம் !

பாமரரும்பயில பாடசாலை அமைத்தவராம்
படிக்கவந்த பிள்ளைப்பசி யாற்றியவராம்
பதவிசுகங்களை உதறிய கர்மயோகியாம்
படிக்காதமேதை எனப்பேர் பெற்றவராம் !

நீர்ப்பாசன திட்டம்பல நிறைவேற்றியவராம்
நாட்டுமக்கள் நலமே கருத்தில்கொண்டவராம்
தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவராம்
தமிழர்நெஞ்சில் நீங்காது இடம்பிடித்தவராம் !

அரசாள வந்தவாய்ப்பை உதறித்தள்ளியவராம்
அன்னைஇந்திரா அரியணையேற்றிய கிங்மேக்கராம்
தூய்மைவாய்மை நேர்மையை கடைபிடித்தவராம்
கர்மவீரர்காமராசர் புகழ்என்றும் வாழ்கவே ......!!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (10-Aug-14, 1:39 am)
பார்வை : 192

மேலே