உன் விரலுக்குள் என் வாழ்வு -போட்டிக்கவிதை

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ...
கரிசன களிம்புக்காரன் ...நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்
அன்பும் பாசமும் விளைத்தாய்
விண்ணில் தோன்றும் முழு நிலவாய்
என் வாழ்வில் ஒளி தந்தாய்
உன் பாதம் அடியே என் சொர்க்கம்
உன் பாத அடிகளே என் மார்க்கம்
மண்ணறைக்குள் உன்னை புதைத்தாலும்
என் மனவறைக்குள் வாழ்கின்றவன் நீ

தொட்டில் கட்டி தாலாட்டியவன் நீ
என்னை தட்டிகொடுத்து சீராட்டியவன் நீ
விண்தொடும் தூரமெல்லாம் தூரமல்ல
உன்னால் முடியும் என்றவன் நீ
மண்ணில் வாழும் காலமெல்லாம்
என்னை மனிதனாய் வாழச்சொன்னவன் நீ
என் மனம் என்னும் கல்லுக்குள்
ஈரம் தெளித்தவன் நீ

இந்த சொல்லுக்குள் உயிர்கொடுத்தால்
உன் குணமே பாடிச்செல்லும்
பூவுக்குள் உயிர்தந்தால்
உன் மென்மை கண்டு நாணிப்போகும்
சந்திரனும் சூரியனும்
தினம் உன் வீடு தேடிவரும்
உன் நேரசூசியை கடனாய் கேட்டு
மன்றாடி வாங்கிப்போகும்
இத்தனை சிறப்பு நான் பாடியும்
இன்னும் எத்தனையோ சிறப்புடையோன் நீ
என்றும் என் நெஞ்சில் குடியிருப்பவன் நீ

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (10-Aug-14, 1:12 am)
பார்வை : 137

மேலே