தங்கையால் கைவிடப்பட்ட அண்ணன்

தங்கையாக மட்டும் நினைக்கவில்லை !
தன் கையாகவே நினைத்தேன் !

நம்பி கைப்பற்றியதன் பலனாக,
என் நம்பிக்கையை எரித்துவிட்டாள் !

பொய்கள் பல சொல்லி,
போலியாக இருந்தாள் என்னோடு !

மனதில் சுமந்தேன் அவளை,
(திரு)மணத்திற்கு கூட அழைக்கவில்லை !

ஆசைகள் அனைத்தும் அழிந்தது,
தீயில் சிக்கிய காகிதமாக !

நின் நினைவுகள் நீங்கவில்லை,
நெஞ்சில் வடுவாகி வலிக்கிறது !

வரம் ஒன்று கேட்கிறேன்,
கல்லாகி நிற்கும் கடவுளிடம் !

எங்கிருந்தாலும் என் தங்கை,
இன்பமாக வாழட்டும் என்று !

எழுதியவர் : கர்ணன் (10-Aug-14, 8:56 pm)
சேர்த்தது : சிவா (கர்ணன்)
பார்வை : 971

மேலே