உன் விரலுக்குள்

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ
கரிசன களிம்புக்கரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்.

உன் நகல் நான்
நீ தீட்டிய திட்டங்கள் யாவும் எனக்கே
உன் அதிகாரம் என் மீது மட்டுமே
அன்பு கலந்த முறைப்பில் நான் தடுமாறி போனேன்.

நான் சொல்லிய பொய்யிகளில்
இலாவகமாக உண்மையைக் கண்டுணர்ந்தாய்
தோள் சாய இடம் தந்தாய்
நல்ல தோழனாக என்னுள் வலம்வந்தாய்.

நான் தடுமாறிய வேளைகளில் தாங்கிப்பிடித்தாய்
பள்ளி செல்ல நான் புத்தகப்பை சுமந்தேன்
நீ என்னை சுமந்தாய்
நீயே என் உலகம் என்றிருந்த எனக்கு
அது வேறொரு உலகமாக தோன்றியது.

தோல்வியை கண்டு கலங்கிய என்னை
தோள்தட்டி தேர்த்தினாய்
நீ அருகிலிருந்த தைரியத்தில்
தோல்வியைத் தூக்கிஎறிந்தேன்
வெற்றி என் வாசல் வந்து நின்றது.

நான் வெற்றியைத் தழுவியபோது
நீ என்னை தழுவி உச்சி முகர்ந்து
கொடுத்த முத்தத்தை -நான்
இன்றும் மெய்சிலிர்க்க உணர்கிறேன்.

எனது செயல்கள் யாவும் உனது பிரதிபலிப்பே
தந்தை என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் நீ
உன்னால் செதுக்கப்பட்ட சிலை நான்
எத்தனை ஜென்மம் வேண்டுமோ?
எனது நன்றிக்கடனைத் தீர்க்க!

எழுதியவர் : ajantha (10-Aug-14, 10:01 pm)
Tanglish : un viralukul
பார்வை : 93

மேலே