நானும் நீயும் - நாகூர் கவி

காற்று நான்
செயற்கை சுவாசம் நீ....

ஊற்று நான்
கானல் நீ....

நம்பிக்கை நான்
வெறும் தும்பிக்கை நீ...

கவிதை நான்
வெட்டி வார்த்தை நீ...

வாள் நான்
வால் நீ....

தோள் நான்
தேள் நீ....!

நட்பின் அகராதி நான்
நாதியற்ற கபோதி நீ...

இருளை கிழிக்கும்
ஒளிக்கீற்று நான்....

இருளிலேயே காலத்தை கழிக்கும்
சாத்தான் நீ....!

மகிழ்ச்சி நான்
துக்கம் நீ....

கழகம் நான்
கலகம் நீ...

வெற்றி நான்
தோல்வி நீ....

விளக்கம் நான்
குழப்பம் நீ...

தாலாட்டு நான்
ஒப்பாரி நீ...

வெற்றித்தட்டு நான்
வெத்துவெட்டு நீ...

தென்றல் நான்
புழுதி நீ...

முகவரி நான்
முகாரி நீ...!

எழுதியவர் : நாகூர் கவி (10-Aug-14, 9:55 pm)
பார்வை : 180

மேலே