கவிதையல்ல , நிஜம்

என் நகர உழைப்புகள்
எனக்கு பணத்தை
தந்தது.

என் கிராம நினைவுகள்
எனக்கு சந்தோஷத்தை
தந்தது.

' பேசாமல் அங்கேயே
ஏழையாய் இருந்திருக்கலாம் '
நினைத்த போது

மகன் சொன்னான்,
"அப்பா நான்
இன்ஜினியர் ஆவனும் "
மகள் சொன்னாள்
"டாக்டர் ஆவனும் "

மனசு சொல்லிற்று,
'நீ பணக்காரன்
ஆவனும்'.

எழுதியவர் : ராம்வசந்த் (12-Aug-14, 8:52 am)
பார்வை : 127

மேலே