அறிவுரையை செவிமடுப்பீர் ​

அன்னையோ ஆசிரியையோ
அறிவுரையை செவிமடுப்பீர் ​!
அறியாப்பருவம் நுழைவாயில்
அறிந்துகொள்ள வாழ்வினிலே !

ஆர்வமுடன் அகநிறைவோடு
ஆரம்பமுதலே அறிந்திட்டால்
ஆய்ந்தறியும் பகுத்தறிவோடு
ஆள்பவனா ​ய் உரு​வாகலாம் !

அன்பை கற்றிடுக அன்னையிடம்
அறிவைப் பெற்றிடுக ஆசிரியரிடம் !
அகிலத்தை அறிந்திடுக அன்னையிடம்
அறிவியலை கற்றிடுக ஆசிரியரிடம் !

ஆளாக்கிய அன்னையை வணங்கிடுவீர்
அறிவூட்டிய ஆசிரியரை போற்றிடுவீர் !
வாழும்வரை அன்னையை கைவிடாதீர்
வாழ்வினில் ஆசிரியரை மறவாதீர் !

அன்னையோ ஆசிரியையோ
அறிவுரையை செவிமடுப்பீர் ​!


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Aug-14, 9:23 am)
பார்வை : 522

மேலே